×

வாழைத்தண்டு சாறில் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக ,வாழை தண்டு நமக்கு ஆரோக்கியம் தரும் .. .அந்தளவுக்கு இதன் பயன்கள் ஏராளம் .இன்று இந்த வாழை தண்டு மூலம் நமக்கு கிடைக்க கூடிய பலன்களை பார்க்கலாம் .
1.வாழைத்தண்டு துவர்ப்பு சுவையுடையது என்பதால் பலரும் இதை உணவில் சேர்க்க மாட்டார்கள் .ஆனால் இதன் பயன்கள் பற்றி தெரிந்தால் இதை தினமும் சேர்த்து கொள்வீர் .
2.இது நம் உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேற்றும் என்பதால் நமது உடலின் எடை குறைப்புக்கு வழி செய்யும் .
3.மேலும் நார்சத்து இதில் மிகுந்து காணப்படுவதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் .
4.இதில் பேரீச்சம் பழம் போல ஏராளமான இரும்பு சத்து அடங்கியுள்ளதால் ரத்த சோகை ஏற்படாமல் நம்மை காக்கும்
5.வாழைத்தண்டு சாறினை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், விரைவில் சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரின் வழியே வெளியேறிவிடும்.

6.சிலர் வாழைத்தண்டு சாறில் துவர்ப்பு அதிகம் இருப்பதால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்வார்கள்.
7.அதோடு இரண்டு பச்சை ஏலக்காயை தட்டிப் போட்டுக் குடிக்கும்போது கற்கள் உள்ளிருக்கும்போதும், வெளியேறும்போது ஏற்படுகின்ற வலி கட்டுப்படும்.
8.வாழைத்தண்டு சாறில் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வந்தால், கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.