கல்லீரலில் கோளாறு இருந்தால் எங்கே பரு வரும் தெரியுமா ?
பொதுவாக பரு வருவதற்கு ஆண்களுக்கு மன அழுத்தமும் ,பெண்களுக்கு மாத விலக்கு பிரச்சினையும் காரணமாக சொல்லப்படுகிறது .அந்த பருக்கள் மூலம் எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு என்று இந்த பதிவில் பார்க்கலாம் .
1.ஒருவருக்கு அடிக்கடி நெற்றியில் பரு வந்து போகிறது என்றால் அவருக்கு ஜீரண சக்தி சீரில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம்.
2.உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் சரியாக வெளியேற்ற படாததாலும், நெற்றியில் முகப்பரு அடிக்கடி வரும்.
3.புருவங்களுக்கு மேலே பருக்கள் வந்தால், போதுமான அளவு தூக்கமில்லை என்று அர்த்தம்.
4.மனஅழுத்தம், மனச்சோர்வு, அத்துடன் சீரான ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும் பருக்கள் ஏற்படும்
5.புருவங்களுக்கு அருகில் பருக்கள் வருவதற்கு முதல் காரணம் தூக்கம் இன்மை.
6. சரியாக தூங்காததினால் மன அழுத்தம், உடல் சோர்வு ஏற்படுகிறதா. உடல் சோர்வு மன சோர்வு இருப்பதினால் சரியாக தூக்கம் வரவில்லையா. எந்த காரணமாக இருந்தாலும் நீங்கள் சரியாக தூங்கவில்லை.
7.மது அருந்துபவர்களுக்கும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கும் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் பரு வரும் .
8.அதனால் கல்லீரலில் கோளாறு வரும் ,அதனால் இந்த எச்சரிக்கையை உணர்ந்து அந்த பழக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும் .