×

புதினா துவையல் சாப்பிட்டால் எந்த நோய்களை துவைத்து எடுக்கலாம் தெரியுமா ?

 

பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியம் தர கூடியவை .இந்த கீரை வகைகளில் புதினா கீரை நிறைய ஆரோக்கிய நன்மைகள் உடையது .அதனால் இந்த புதினா மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக காய் கடைகளில் விலை மலிவாக கிடைக்கும் புதினா கீரையானது மணமும், காரமும், அதிக ஊட்டச்சத்தும் உள்ள ஒன்றாகும்.

2.இந்த புதினா கீரை வயிற்று புழுக்களை அழிக்கவும் , வாய்வு தொல்லையை போக்கவும் மருந்தாக பயன்படுகிறது.

3.சிலருக்கு வயிற்று போக்கு நிற்காமல் போகும் .இப்படி லூஸ் மோஷன் அதிகமாக இருந்தாலும் புதினா துவையலோ அல்லது சட்னியாகவோ சாப்பிட்டால் உடனடியாக வயிற்று போக்கு நீங்கும்.

4.சில ஆண்களுக்கு ஆண்மை குறைவு இருக்கும் .இந்த குறைவை போக்கும் சக்தி புதினா கீரைக்கு உள்ளது.

5.சிலருக்கு உடல் தொப்பை, பருமன் இருக்கும் .இந்த தொப்பை பருமன் புதினா மூலம் குறைகிறது.

6.இந்த புதினா மூலம் அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். இந்த புதினா மூலம் காலரா அண்டாது.

7.இந்த புதினாவை  துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டால் நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தமாவதோடு புதிய இரத்தமும் உற்பத்தியாகும்