காலை வேளைகளில் புதினாவை மென்று சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக புதினாவை நாம் மருந்து போல பயன் படுத்தினால் பல விதமான நோய்கள் நம்மை அண்டாது இந்த புதினாவின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம் .
1.புதினா எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து விடும் .
2.மேலும் ஒவ்வாமை ,பல் வலி ,சளி தொல்லை ,சுவாச கோளாறு ,செரிமான கோளாறு போன்ற நோய்களை இந்த புதினா குணப்படுத்தும் .
3.ஆஸ்த்மா நோயுள்ளவர்கள் தங்களின் நுரையீரலை பலப்படுத்த இந்த புதினாவை பயன் படுத்தலாம் 4.வயிற்று போக்கு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினையுள்ளவர்கள் புதினாவை சாப்பிடலாம் .
5.மேலும் ஒற்றை தலைவலி ,வாய் துர்நாற்றம் ,வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கு இந்த புதினாவை உபயோகப்படுத்தலாம் ,.
6.வாய் சுகாதாரம் மேம்படுவதற்கு புதினா ஓர் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
7.காலை வேளைகளில் புதினாவை தண்ணீரில் கழுவி, மென்று சாப்பிட்டு வந்தால் ஒரு சில நாட்களிலேயே வாய் துர்நாற்றம் நீங்கும்.
8.மாதவிடாய் தாமதமாக வரும் பிரச்சனை உள்ள பெண்களுக்கு புதினா நல்ல தீர்வு தரும்.