×

படுத்தி எடுக்கும் மூட்டு வலிக்கு சில இயற்கை வழிகள்

 

பொதுவாக மூட்டுக்ளில் அதிக தேய்மானம் ஏற்படுவதாலும் ,காலை கடன் கழிக்கும் முறையிலும் இந்த மூட்டு வாதம் வயதானவர்களுக்கு அதிகம் ஏற்பட்டு தொல்லை கொடுக்கிறது .இந்த மூட்டு வாத நோய்க்கு சில இயற்கையான முறையில் தீர்வுகள் கூறுகிறோம்
1.உடலின் முக்கியமான மூட்டு பகுதிகளில் வலி ஏற்பட்டு , உடலின் கை கால்கள் அடிக்கடி விறைத்து கொண்டு . உடல் சரிவர இயங்க முடியாது.
2.இதுதான் இந்தவாத நோயின் முக்கிய அறிகுறி .


 3.இதற்கு சிறந்த சிகிச்சையாக முதிர்ந்த பூவரசன் மர பட்டைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்ட காய்ச்சி, அதில் 20 கிராம் தேன் விட்டு கலந்து மூன்று நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
4.இக்காலங்களில் பத்தியமாக உணவுகளை உப்பில்லாமல் உண்ண வேண்டும். மூன்று நாட்களில் இந்த மூட்டு வாதம் குணமாகி வரும்
5.அடுத்து இந்த மூட்டு வாதத்திற்கு இன்னொரு சிகிச்சையாக   இரண்டு கைப்பிடியளவு மாவிலங்கம் மர இலைகளை நீரில் போட்டு, அதை 50 மில்லி அளவுக்கு சுண்ட காய்ச்சி அதில் 50 மில்லி தேங்காய்ப்பால் கலந்து, தினமும் மூன்று வேளை குடித்து வந்தால்
6.இப்படி குடிக்க இந்த  மூட்டு வாதம் நீங்கி நல்ல நிவாரணம் கிடைக்கும் .
7.மேலும் இந்த நேரத்தில் பத்தியமாக . முருங்கை மரத்தின் இலைகளை பக்குவம் செய்து உண்ண வாதம் குணமாகி ஆரோக்கியம் தரும்