தேங்காய் பால் வைத்து தினமும் வாய் கொப்புளிக்க எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக வாய்ப்புண்ணுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான் மேலும் வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், ஆகியோருக்கும் வரலாம் .இந்த புண்ணை எப்படி தவிர்க்கலாம் என்று நாம் பாக்கலாம்
1..வெற்றிலை, புகையிலை, பான்மசாலா , புகை தவிர்த்தாலே இந்த நோய் வராமல் இருக்கலாம் .
2.மேலும் ஊட்ட சத்து குறைபாடு உள்ளோருக்கு இந்த வாய் புண் வரலாம் .
3.ஆண்களை விட பெண்களுக்கு இந்த புண் வரலாம் .
4.காரணம் அவர்களின் மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றம் வருவதாலும் ,கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுப்பதால் இந்த தொல்லை அதிகம் .
5.வாய்ப்புண் குணமாக தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும்.
6.வாய்ப்புண் குணமாக ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமைந்து சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும் .
7. தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளித்தால் வாய்ப்புண் குணமாகும் .