×

நாவல் பழ விதைகளை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் என்னாகும் தெரியுமா ?

 

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் நாவல் பழ விதையின் பொடியை தாங்கள் சாப்பிடும் மருந்துகளோடு தினம் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவு கணிசமான அளவு குறைந்து விடும் ,
இதன் நண்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்


1. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இந்த நாவல் பழ விதைகளை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் போதும் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு விடலாம்
2.பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளுக்கு கூட இந்த நாவல் பழம் சிறந்த பலனை கொடுக்கும்
3.நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும்.
4.மேலும் இந்த பழம் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். .
5.இதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக இது ஒரு சாலையோரத்தில்  இந்தியா முழுவதும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
6.பேரரசர் அசோகர் நட்ட சாலையோர மரங்களில் இது முக்கியமான ஒன்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன. 7., இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிட்டு நமக்கு பேருதவி புரிகின்றது