×

இரவில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்கும் நபர்களுக்கு வரும் நோய்கள் .

 

பொதுவாக  பகலில் நீண்ட நேரம் தூங்குவோருக்கும் ,இரவில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவோருக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. எட்டு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவோருக்கும் இந்த பக்க வாத வாய்ப்பு அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது .
2.மேலும் தூக்க பிரச்சினை இல்லாமல் இருக்க ,தூங்குவதற்கு முன்பு டீ ,காப்பி குடிக்காதீர்கள் .
2.அது மட்டுமல்லாமல் தூங்கும்போது ஒருபக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும் .அப்போது தான் இதய துடிப்பு சீராக இருக்கும் .
3.மேலும் மல்லாக்கவோ அல்லது குப்புறவோ படுத்து தூங்க கூடாது .


4.தூங்க போவதற்கு முன் செல்போன் ,கம்ப்யூட்டர் போன்றவற்றை ஆப் செய்து விடுங்கள் .
5.மேலும் திட பொருட்கள் எதையும் சாப்பிடவேண்டாம் ,மேலும் தண்ணீரையும் தூங்க செல்வதற்கு முன்பு குடிக்க வேண்டாம்
6.இரவில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்கும் நபர்களுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமனுடன் பல ஆரோக்கிய குறைபாடு உண்டாகும் .
7.எவ்வளவு சுகமாக இருந்தாலும், நீங்கள் நீண்ட காலமாக அதிக நேரம் தூங்குபவராக இருந்தால், முதுகுவலி உங்கள் உடலில் மெல்ல மெல்ல அதிகரித்து ,அது உடலை நோய்களின் கூடாரமாக மாற்றி விடும்