×

தினமும் உணவில் பாதாமை சேர்க்கும்போது என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா ?

 

பொதுவாக பாதாம் பருப்பு நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது .இதன் மருத்துவ குணங்களை நாம் பாக்கலாம்

1.பாதாம் பருப்பு மூளையின் செயல்பாடுகளை சிறப்பாகவும் ,உடலுக்கு நல்ல வலுவையும் தரக்கூடியது 2.இதில் இருக்கும் மெக்னீசியம் மற்றும் விட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நமக்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது .
3.இதில் குரைந்த கலோரிகள் மற்றும் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளது .

4.தினமும் உணவில் பாதாமை சேர்க்கும்போது பசியைக் கட்டுப்படுத்துகிற நார்ச்சத்துக்களும் அதிகமாக கிடைக்கின்றன.
5.அதனால் ஏற்கனவே உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட்டு கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் மிக வேகமாக எடையைக் குறைக்க முடிகிறது.
6.பாதாமை பொடி செய்து இதனை தினசரி ஓட்ஸ் போன்ற கஞ்சிகளில் அல்லது நீங்கள் மிக விரும்பி சாப்பிடும் தோசை, இட்லி, ரொட்டி போன்றவற்றை செய்யும் போது அந்த மாவுடன் பாதாம் பொடியையும் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.
7.இது சாப்பிட சுவையாகவும் ,ஊட்ட சத்துக்களை கொடுப்பவையாகவும் இருக்கும்