×

கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்களுக்கான சில ஆலோசனைகள்

 

பொதுவாக சில சமயங்களில் காரணங்கள் இல்லாமலும் கருச்சிதைவு ஏற்படலாம். இதனால் உங்களை நீங்கள் குறை கூற தேவையில்லை. இதன் காரணம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.கருச்சிதைவு ஏற்படும் பட்சத்தில் முழுமையாக ஆராயப்பட வேண்டும். ஆண் பெண் இருவரின் மருத்துவ விவரமும் முழுமையாக ஆராயப்படவேண்டும்.
2.கர்ப்பமாகும் பெண்ணிற்கு  சர்க்கரை, மன அழுத்தம், தைராய்டு போன்ற நோய்கள் இருப்பின் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு கர்ப்பத்திற்கு திட்டமிட வேண்டும்.


3.லேப்ராஸ்கோப்பி, எண்டோஸ்கோப்பி மூலம் கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்ணின் கர்ப்பப்பையின் புண்கள்  அல்லது ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் கண்டறியப்பட வேண்டும்.
4.கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்ணின் உடல் எடை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
5.கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்ணின் சரியான வயதில் குழந்தைக்கு திட்டமிட வேண்டும்.
6.புகைப்பிடித்தல், போதைப் பழக்கம், மது அருந்துவது போன்றவற்றை நிறுத்திய பிறகே கர்ப்பத்திற்கு திட்டமிட வேண்டும்