×

சப்ஜா  விதை சர்பத்தை குடித்து வந்தால் எந்த நோயெல்லாம் ஓடிப்போகும் தெரியுமா ?

 

பொதுவாக  சப்ஜா விதை  நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது .இதன் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.சிறிதளவு  சப்ஜா விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை போன்ற நோய்கள் நம்மை விட்டு ஓடி விடும் .
2.சப்ஜா  விதையை  செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் போன்ற நோய்கள் நம்மை விட்டு ஓடி விடும்

3..சப்ஜா இலை உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீரை வெளியேற்றும் .அந்த நச்சு நீர்  வியர்வையாக வெளியேற்றிவிடும்.
4.சளி , சைனஸ் தொந்திரவால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் இந்த இலைகளை  கைபிடி அளவு எடுத்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால்  மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.
5.அனைத்துவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது. படர்தாமரை தொந்தரவிற்க்கு  இந்த இலைகளை அரைத்து சருமத்தில் பூசி வரலாம்.
6.மேலும் குழந்தைகளை குளிப்பாட்ட இந்த இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளிக்க வைத்து ஆரோக்கியம் பெறலாம் .