உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் இந்த பழம்
பொதுவாக செவ்வாழை மற்ற வாழைப்பழங்களை விட அதிக ஆரோக்கியம் நிறைந்தது .இப்பழத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை.
2.செவ்வாழையில் இருக்கிற பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.
3.சிலருக்கு உடலில் ஏற்படும் சில பாதிப்புகளாலும், மனதில் ஏற்படும் மிகுந்த அழுத்தங்களாலும் சிலருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படுவதால் உடலில் பலம் குறைந்து ஆண்மை குறைபாடும் ஏற்படும்
4. உடலை ஆரோக்கியத்தின் பிடியிலிருந்து நழுவ வைக்கிறது .
5.இப்படி நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
6.தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெற்று இல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் ஆற்றலை இது கொடுக்கும்
7.செவ்வாழை பழத்தில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது .