×

தோல் நோய்களை விரட்ட குப்பைமேனி இலைகளை  எப்படி யூஸ் செய்யணும் தெரியுமா ?

 

பொதுவாக தோல் நமது உள் உறுப்புகளை பாதுகாக்கும் வேலையை செய்து வருகிறது .ஆனால் இந்த தோலின் மீது சில நுண் கிருமிகள் பரவி அது நாளடைவில் நம் உடலுக்குள் நுழைந்து உள்ளே இருக்கும் உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது .இதனால் நமக்கு மலக்குடல் முதல் சிறுகுடல் வரை புழுக்கள் வளர தொடங்குகிறது .
தோல் நோய்களை விரட்ட  சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள் .


1.தோல் அரிப்பு, சொறி போன்ற தோல் நோய்கள்  குணமாக 15 முதல் 20 குப்பைமேனி இலைகளை எடுத்துக்கொண்டு குணப்படுத்தலாம் .
2.எப்படியென்றால்  அதோடு அரை டீ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து ,அதில் இரண்டு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு அதில் நாம் வைத்துள்ள மூலிகையை போட்டு சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும். 3.பிறகு இதை ஆற வைத்து  சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
4.பிறகு நமது உடலில் எங்கெல்லாம் சொறி, அரிப்பு போன்றவை உள்ளதோ அந்த இடங்களில் இதை ஒரு வாரம் தடவி வந்தால் சொறி, அரிப்பு போன்றவை சரியாகி நமது தோல் பளபளப்பாக மாறி விடும் .
5.அடுத்து கீழாநெல்லி இலையை நன்கு அரைத்து உடலில் எங்கெல்லாம் அரிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் பூசிக்கொண்டு 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் அந்த அரிப்பு மற்றும் புண்கள் குணமாகி விடும்