×

சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கை பொருட்கள்

 

பொதுவாக இந்த காலத்தில் சரும அழகிற்கு நிறைய செலவு செய்கின்றனர் .அதனால் இயற்க்கை முறையில்
சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் சரும பொலிவிற்காக பலர் கிரீம்களையும் ஃபேஸ் வாஷ் களையும் பயன்படுத்துகின்றனர்.
2.ஆனால் இயற்கையாகவே சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும். வாங்க பார்க்கலாம்.

3.தூங்கச் செல்வதற்கு முன் சுத்தமான நீரில் முகத்தை கழுவினால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சுத்தமாக இருக்கும்.


4.இது மட்டும் இல்லாமல் கற்றாழை வெள்ளரி சந்தன பொடி போன்றவற்றை இரவில் தூங்கும் முன் போட்டுக் கொண்டால் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


5.இது முகத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கவும் உதவுகிறது.

6.மேலும் முடியை மசாஜ் செய்வதன் மூலம் சோர்வு நீங்கி உறக்கத்தை கொடுப்பதன் மூலம் சருமம் பளபளப்பாகும்.
7.மேலும் வறண்டு இருக்கும் சருமத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

8.எனவே செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் வரும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு இயற்கையான பொருட்களை வைத்தே முகத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்