தூங்காமல் தவிக்கிறவங்களை தவிக்க விடும் நோய்கள்
பொதுவாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கும் மனிதனுக்கு பெரும்பாலும் எந்த நோயும் வராது .நாம் ஆழ்நிலை தூக்கத்தில் இருக்கும்போதுதான் பல சுரப்பிகள் தங்கள் பணியை செய்கின்றன .தூக்கம் குறைவதால் உண்டாகும் நோய்கள் பற்றி நாம் காணலாம் இப்பதிவில் .
1.ஐந்து மணி நேரத்திற்கு குறைவாக தூங்கும் மனிதனுக்கு உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரை தாக்கும் அபாயம் உள்ளது .
2.மேலும் மூளையில் முடிவெடுக்கும் திறனும் குறைவாக தூங்குவோருக்கு குறைந்து விடும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
3.சரியான தூக்கம் இல்லாமல் தவித்தால், காது, மூக்கு மற்றும் தொண்டை சார்ந்த பிரச்னைகள் உருவாகும். 4.இதனால் அவர்களுடைய மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டு சளி, காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும்.
5.சரியாக தூங்காமலிருந்தால் உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும்.
6.ஒருவேளை ஏற்கனவே இதுபோன்ற பிரச்னைகளால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தால், மேலும் தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படும்.
7.நம் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சுரபிகள் பல தூங்கும் நேரத்தில் தான் பணி செய்கிறது. நீங்கள் ஆழ்ந்த தூக்கத்துக்கு போகாமலும், நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதாலும் அவற்றால் சரிவர இயங்க முடியாது.
.