×

எப்படி படுத்து தூங்கினால்  நமக்கு என்னென்ன நோய்கள் வரும்னு தெரிஞ்சிக்கோங்க

 

பொதுவாக  குப்புற தூங்குவோருக்கு முதுகு வலி ,கழுத்து வலி போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் தோன்ற வாய்ப்புள்ளது .இது பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.குப்புற தூங்குவதால்  சிலருக்கு குடல் பிரச்சினை கூட ஏற்பட வாய்ப்புண்டு ,


2.மேலும் இப்படி குப்புற தூங்குவதால் முகத்தில் உள்ள தோலுக்கு சரியான முறையில் ஆக்சிஜன் கிடைக்காததால் முக சுருக்கம் உண்டாகும் ,
3.கர்ப்பிணிகள் இப்படி தூங்கினால் அது குழந்தைக்கு பாதிப்பே .மேலும் பல பிரச்சினைகள் பற்றி பார்க்கலாம்
4.ஆண்களுக்கு மட்டுமில்லை பல பெண்களுக்கும்  குப்புற படுக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இப்படி தூங்குவது மார்பு வலியை ஏற்படுத்தும்.
5.குப்புற படுக்கும் போது, மார்பகத்தின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் போது, அது வலியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு மார்பகத்தில் வலி ஏற்பட்டால், முதலில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
6.அதோடு இனிமேல் குப்புற படுக்கும் பழக்கத்தைக் கைவிட்டு வேறு பொசிஷனில் தூங்குமாறு அறிவுறுத்தப்டுகிறது .
7.முழு இரவும் தலைகுப்புற படித்துவிட்டு, காலையில் எழுந்து நீங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் ஒரு மாற்றம் தெரியும்.
8.இரவு முழுவதும் தலையணையில் புதைந்துகொண்டு படுத்ததால், தலையணை படிப்பு முகத்தில் தெரியும். நெற்றி படிப்புகளில் பதிந்துவிடும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முகம் வீக்கமடையும்.