×

எந்த வயசுக்காரங்க எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா ?

 

பொதுவாக தூக்கமின்மையால் இன்று பலர் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் .குறிப்பாக சர்க்கரை நோய் ,மன அழுத்தம் ,இதய நோய் போன்ற கொடுமையான நோய்களுக்கு வரவேற்பு கூறுவது இந்த தூக்கமின்மை பிரச்சினைதான் .
1.சரியான தூக்கம் இல்லையென்றால் உடலுக்கு பல பிரச்சனைகள் வரும். மேலும் செய்யும் வேலையில் கவனம் குறையும்.
2.ஆனால் யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளை  கூறியுள்ளோம்

.
3.5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 10முதல் -13 மணி நேரம் தூங்க வேண்டும்.
4.14-17 வயதுடைய சிறுவர் சிறுமிகள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.
5.18-64 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்கினால் உடல் ஆரோக்கியம் இருக்கும் .
6.65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்கினால் உடல் ஆரோக்கியம் பிறக்கும்