×

தினம் காலையில் 10 மிளகு சாப்பிட எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?

 

பொதுவாக சிலர் காலையில் தூங்கி எழுந்ததும் தொடர்ந்து தும்மிக்கொண்டே இருப்பார்கள் .இந்த தும்மல் நாளடைவில் சிலருக்கு ஆஸ்த்மாவாகவும் ,இன்னும் சிலருக்கு சைனஸ் நோயாகவும் மாற வாய்ப்புள்ளது .இந்த மாதிரி அடுக்கு தும்மல் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்
1.நமது சுற்றுச் சூழல் மிகவும் மாசுபட்டிருப்பதே இப்பிரச்சனைகளுக்குப் பெரிதும் காரணமாய் அமைகின்றன.
2..அடுக்கு தும்மல் வராமலிருக்க   சுற்றுச்சூழலை தூய்மையாய் தூசு சேராமல் வையுங்கள்.
3.நாம் தூங்கும்   தலையணை உறையை அடிக்கடி சுத்தம்  செய்யுங்கள்.
4.மேலும் இந்த தும்மலிலிருந்து தப்பிக்க
 தூசு உள்ள இடங்களில் மூக்கில் துணி கட்டிக் கொள்ளுங்கள்.


5.அடுத்து அதைவிட இன்னொரு முக்கியமானது  
 கை நகங்களை அழுக்கின்றி தூய்மையாய் வைத்திருங்கள்.
6.மேலும் இந்த தும்மல் பிரச்சினை வராமலிருக்க  கொழுப்புப் பொருட்களை குறைவாய் உண்ணுங்கள்.
7.துளசி இலைகளை தினம் சாப்பிடுங்கள்.அதோடு மட்டுமல்லாமல் தினம் காலையில் 10 மிளகு சாப்பிடுங்கள்.
8.மேலும் தூதுவளைப் பொடியை தோசையில் சிறிது கலந்து சாப்பிடுங்கள்.