பற்கள் கெட்டியாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
பொதுவாக பல்வலிக்கு காரணம் பல்லில் உண்டாகும் சொத்தை பற்கள்தான் .இதற்கு நாம் பல் டாக்டரிடம் சென்றால் உடனே அந்த சொத்தை பல்லை பிடுங்கி விடலாம் என்று கூறுவார் .இதை எப்படி சரி செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1. இப்படி பற்களை பிடுங்கி கொண்டே போனால் நமது முக அமைப்பு மாறி விடும் .
2.எனவே சித்த மருத்துவத்தில் இதற்கு நம் வீட்டிலிருக்கும் புதினா ,கிராம்பு ,பூண்டு மற்றும் உப்பை கொண்டே தீர்வுகள் உண்டு .
3.சொத்தை பல்லுக்கு சிறந்த தீர்வு உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து தினம் மூன்று வேலை வாய் கொப்பளித்து வர வேண்டும் .
4.பற்கள் கெட்டியாக இருக்க வேண்டுமானால் ஈறுகளை காலையில் இரண்டு மூன்று நிமிடங்கள் விரலால் அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால் 80 வயதானாலும் பற்கள் விழாது.நம் பற்கள் பாதுகாப்பாக இருக்கும்
5.மேலும் பல்லில் சொத்தை விழாமலும் ,பல் சிதைந்து போகாமலும் இருக்க பிரஷ் உபயோகிப்பதை அறவே தவிக்க வேண்டும்.
6.சிலர் யாரிடமாவது பேசிக்கொண்டே பிரஷ் கொண்டு கரகரவென்று அதிக நேரம் தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் ஈறுகள் சீக்கிரம் பழுதடைந்து பற்கள் ஆடிப்போய் நாளடைவில் விழுந்து விடும் வாய்ப்புள்ளது .