×

தொண்டை வலி மாயமாய் மறைந்தே போக உதவும் குறிப்புகள்

 

பொதுவாக  சிலருக்கு காய்ச்சல் இல்லாமலே எச்சில் விழுங்க கூட முடியாமல் வலி இருக்கும் .இதற்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தி குறைபாடே காரணம் எனலாம் . இயற்கை மருத்துவத்தில் இதை எளிதான முறையில் குணப்படுத்தலாம்

தொண்டை வலி  எளிதில் குணமடைய செய்யும்  குறிப்புகளை பற்றி பார்ப்போம் வாருங்கள் ..
1 : தொண்டை வலியால் எதையும் விழுங்க முடியாமல் அவதிப்படுவோர் ஒரு லவங்க பட்டை , 4 ஏலக்காய், ஒரு டீ ஸ்பூன் சோம்பு, 25 கிராம் தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், புதினா இலை 5 ஆகியவற்றை  தண்ணீரில்  நன்கு கொதிக்க விட வேண்டும்.


2.பிறகு அந்த கொதித்த நீரைகுடித்து வந்தால் தொண்டை வலி மாயமாய் மறைந்தே போகும்
3. தொண்டை வலியால் பேசவே சிரமப்படுவோர் 2 டம்ளர் நீரில் திரிபலா சூரணம் சேர்த்து , சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
4.பிறகு கொதித்த நீரை தொண்டையில் படும்படி வாய் கொப்பளித்து  வந்தால்  தொண்டை வலி நீங்கி நன்றாக பேச முடியும் .
5. நாள் பட்ட தொண்டை வலி எளிதில் குணமாக, வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதோடு சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம்.
6.இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறி விடும் .