×

வெள்ளை வெங்காயம் இத்தனை தொல்லையை போக்குமா ?

 

பொதுவாக வெங்காயத்தில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது .குறிப்பாக வெள்ளை வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது .அதனால் இந்த பதிவில் நாம் வெள்ளை வெங்காயம் மூலம் அடையும் பயன் பற்றி பாக்கலாம்

1.வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது

2.கோடை காலங்களில் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெப்பம் குறைந்து ன்,வியர்வையை கட்டுப்படுத்துகிறது.

3.மேலும் நம் வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டிரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது வெள்ளை வெங்காயம்.

4.வெள்ளை வெங்காயம் தினம் தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே அதிகப்படுத்துகிறது.

5.வெள்ளை வெங்காயத்தில் சோடியம் இருப்பதால் வைரஸ் அனைத்தையும் அளித்து வெளியேற்றுகிறது.

6.அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

7.நீரிழிவு நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என ஆய்வுகள் சொல்கின்றன.

8.வெள்ளை வெங்காயத்துடன் சம அளவு வெள்ளரிக்காய் சேர்த்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளை சதை குறையும்.