×

ஆலமரத்து பட்டையை கசாயம் வைத்து குடித்து வந்தால் எந்த நோய் கட்டுப்படும் தெரியுமா ?

 

பொதுவாக  ஆல மரத்துக்குள் ஆண் பெண் மலட்டு தன்மையை போக்கும் பல மூலிகைகள் அடங்கியுள்ளது .அந்த ஆல மரத்தின் நம் உடலுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகளை நாம் இப்பதிவில் பார்க்கலாம்  

1.ஆலமரத்தின் இளம் வேர்களை நன்றாக அரைத்து எருமை தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உஷ்ணத்தால் ஏற்படும் சீதபேதி நம் வயிற்றை விட்டு ஓடி விடும்  
2.ஆலமர பழங்கள்,ஆலமர விழுது நுனி பகுதி இரண்டையும் அரைத்து பசும்பாலில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிப்பட்டு ஆண்களுக்கு குழந்தை பேரு உண்டாகும் .


3.ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து படிகாரம் சேர்த்து பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால் பல் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது  
4.ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் பெண்களின் கருப்பை வீக்கம் குணமாகி மலட்டு தன்மை நீங்கும்  
5.ஆலமரத்து பட்டையை கசாயம் வைத்து குடித்து வந்தால் நாள் பட்ட சர்க்கரை நோய் கட்டுப்பட்டு ஆரோக்கியம் சிறக்கும் .
6.ஆலமரத்து பட்டையை ஊற வைத்துஅந்த  தண்ணீரை குடித்தால் சீதபேதி கட்டுப்படும்  
7.ஆலமர பழத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்தால் ஞாபக சக்தி அதிகரித்து மூளை பலம் பெரும்