×

நமக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை வராமல் தடுக்கும் இந்த பருப்பு

 

பொதுவாக பாதாம் பருப்பினை  அப்படியே சாப்பிடாமல் முதல் நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் தோலை உரித்து விட்டு சாப்பிட்டாலே உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இதில் உள்ள போலிக் அமிலம் நமக்கு புற்று நோய் வராமல் தடுக்கிறது .
2.தினம் தினம் ரெகுலராக இந்த பருப்பை சாப்பிடுவதால் நமக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை வராமல் தடுக்கும் .


3.மேலும் வயது முதிர்வு பிரச்சினை வராமலும் தடுக்கும் .
4.மேலும் ரத்த சோகை ,மலசிக்கல் ,இதய நலன் ,ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்
5.தினம் பாதாம் பருப்பை உட்கொள்வதால் எடை கட்டுப்பாடு, பிபி, சுகர் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்படும்.
6.தினம் 5 பாதாம் பருப்பு சாப்பிடுவதால் சரும பொலிவும் அதிகரித்து ,முதுமையை தள்ளி போடலாம் .
7.பாதாமில் உள்ள நார்ச்சத்து, குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்  
8.இதில் உள்ள 15 வகையான சத்துக்கள் உடல் சோர்வை குறைத்து நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்