×

சாப்பிட்டதும் குளித்தால் எந்த நோய் வாட்டும்  தெரியுமா ?

 

பொதுவாக  நம்மூர் போல வெப்ப நாடுகளில் வசிப்போர் தினம் இரண்டு வேலை குளிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது .இல்லையென்றால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குளிப்பது நல்லது.இப்பதிவில் குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் குறித்து நாம் காணலாம்  .
1.அதிகாலையில் குளிப்பதால் நம் உடலில் சேர்ந்துள்ள வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியாகும் .


2.நமது கலாச்சாரத்தில் புதன் சனி எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமும் நம் ஆரோக்கியத்துக்காக ஏற்படுத்தப்பட்டது
3.பலர் காலையில் குளிக்காமல் , சாப்பிட்ட பின் குளிப்பார்கள்.
4.இப்படி குளிப்பது தவறு .எதையும் சாப்பிடும் முன் அதிகாலையில் குளிப்பதுதான் ,அதுவும் பச்சை தண்ணீரில் குளிப்பது  ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
5.சிலர் குளிப்பதற்கு முன் சாப்பிடுவர் .இப்படி குளிப்பதற்கு முன் சாப்பிட வேண்டும் என்றால், வயிறு நிரம்பிய உடனேயே குளிக்கக் கூடாது.
6.இப்படி சாப்பிட்டதும் குளித்தால் , உணவு சரியாக ஜீரணமாகாமல், செரிமான பிரச்சனைகள் வந்து நமக்கு தொல்லை கொடுக்கும்
7.எனவே சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து குளிப்போருக்கு ஆரோக்கியம் கூடும்