×

இந்த கசப்பான காயில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

 

பொதுவாக பாவக்காயின் இந்த கசப்பு சுவை காரணமாக பலர் அதை வெறுத்து ஒதுக்குவது உண்டு .ஆனால் அதை அப்படி ஒதுக்க வேண்டிய அவசியயம் இல்லை ,அதற்குள் மிக மிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1. இதில் பசலை கீரையைவிட இரண்டு மடங்கு கால்சியமும் ,வாழைப்பழத்தினை விட இரண்டு மடங்கு பொட்டாசியமும் அடங்கியுள்ளதால் இதை சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொண்டால் சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும் .
2.இதய நோயாளிகள் எடுத்து கொண்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் ,

3.சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது.

4.. அத்துடன் வைட்டமின்-ஏ அதிக அளவில் உள்ளது.

5.இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ – ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும்.

6.ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.
.
7.பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டுள்ளது.