ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையை அரைத்து சாப்பிட எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக விளக்கெண்ணெய் என்றழைக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்க கூடியது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இந்த எண்ணெய் நம் உடலின் மூட்டுக்களில் ஏற்படும் வலி ,மற்றும் கீல் வாதம் ,மற்றும் தீராத மல சிக்கலை குணப்படுத்தும் .
2.விளக்கெண்ணெய் என்றழைக்கப்படும் ஆமணக்கு எண்ணெயை சாப்பிட்டால் குடல் கிருமிகள் மலக்கிருமிகள் போன்றவையும் ஒழியும்.
3.இந்த எண்ணெயுடன் கடுக்காய் (50 கிராம்) சேர்த்து காய்ச்சி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் மூல நோய்கள் முற்றிலும் தீரும்.
4.ஆமணக்கு இலை,துத்தி இலை, முல்தானி மட்டி ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து வாழைப்பூ சாற்றில் குழைத்து வயிற்று பகுதியில் பற்றுப் போட்டால் தளர்ந்து போன வயிறு இறுகும்.
5.ஆமணக்கு இலை,கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சம் பழம் அளவு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகி நம் ஆரோக்கியம் சிறக்கும் .
6.ஆமணக்கு விதை பருப்பு, பூண்டு கழற்சிக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்களின் விரை வீக்கம் குணமாகும்.
7.ஆமணக்கு விதைப்பருப்பை ஒன்றிரண்டாக தட்டி போட்டு துணியில் சுற்றி சட்டியில் போட்டு சூடாக்கி ஒத்தடம் கொடுத்தால் வயிற்றுவலி, கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, வீக்கம்போன்றவை குணமாகும்