×

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் இந்த இரவு உணவு

 

பொதுவாக  சப்பாத்தியில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது .சப்பாத்தி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியை அடக்குகிறது .சப்பாத்தி மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இப்பதிவில் காணலாம்
.1.சப்பாத்தி சாப்பிட்டால் சருமம் பளபளப்பாக இருக்கும்  ,ஜொலிக்கவும் செய்யும் என்பதால் சருமத்திற்கேற்ற உணவு இது என்றால் அது மிகையாகாது ,
2.மேலும் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ,
3.மேலும் நார்சத்து இதில் உள்ளதால் மல சிக்கலை தீர்த்து வைக்கும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

4.சப்பாத்தியை சிலர்  எண்ணெய் எதுவும் சேர்க்காமல் சுடுவார்கள் .அதனால்  அதில் உள்ள குறைவான  கலோரியால்  எடை இழப்பிற்கு சிறந்த உணவாக விளங்குகிறது.  


5. சப்பாத்தியில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி9, வைட்டமின் ஈ ஆகிய வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் நம் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும்  
 6.சப்பாத்தியில் ஜிங்க், காப்பர், அயோடின், சிலிகான், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளதால் நம் ஆரோக்கியம் சிறக்கும்
 7.ஒரு சிறிய அளவிலான சப்பாத்தியில் 70 கலோரிகள், 3 கிராம் புரோட்டீன், 0.4 கிராம் கொழுப்பு மற்றும் உடலுக்கு ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட் 15 கிராம்என இவ்ளோ விட்டமின்கள் உள்ளதால் அதை அடிக்கடி எடுத்து கொள்ளலாம்