×

சாப்பிடுவதற்கு அரை மணி முன்பு ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்தால் நம் உடலில் நேரும் அதிசயம்

 

பொதுவாக  நீரை ஒரு நாளைக்கு ரெண்டு லிட்டர் குடித்தால் மனித உடலுக்கு பலவகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.அது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.ஒரு நாளைக்கு ரெண்டு லிட்டர் குடித்தால் சிறுநீரகங்களுக்குகான பணியை எளிமைப் படுத்துகிறது.
2.ஜீரணத்திற்கும் ,சிறுநீரக செயல்பாட்டுக்கும் ,மல சிக்கல் இல்லாமல் இருக்கவும் தண்ணீர் தேவை .
3.எடை குறைக்க விரும்புவோர் சாப்பிடுவதற்கு அரை மணி முன்பு ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்கலாம்
4.தசைகள், மூட்டுகள்,  இணைப்பு திசுக்காளை  சரியாக நகர்த்த நீர்  உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரலையும் இதயத்தையும் நல்ல முறையில் இயங்கச் செய்கிறது.


5.சர்க்கரை உணவு மற்றும் குளிர்பானங்களை குறைத்துக்கொண்டு சரியான அளவில் நீர் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள ஒட்டுமொத்த கலோரியின் அளவை நீர் கவனித்துக் கொள்கிறது..
6. உடலில் நோய் தோன்றுவதற்கு முதல் அடிப்படையான விஷயம் என்றால் உடல் வெப்பநிலை தான் சரியான முறையில் தண்ணீர் குடித்தால் நீங்கள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
 7. உடலுக்குள்ளும் ,வெளியேயும்  அழுக்குகள் ஏற்படாமல் இருப்பதற்கு தண்ணீரை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.