×

குடிநீரில் எதெல்லாம் போட்டு குடிச்சா எந்த நோயெல்லாம் குணமாகும்னு தெரிஞ்சிக்கோங்க

 

பொதுவாக கேரளாவில் எங்கு சென்றாலும் சிறு ஹொட்டேல் முதல் பெரிய ஹோட்டல் வரை இந்த பதிமுக தண்ணீரை குடிக்க கொடுப்பார்கள் . இதன் மர பட்டைகளை நீரில் கொதிக்க வைத்துக் குடிப்பதினால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.  இதில் அடங்கியுள்ள ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்

1.எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட பதிமுக நீர் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிக உதிர போக்கைக் கட்டுப்படுத்தி, வெள்ளைப்படுதலையும்  குறைக்கிறது.


2.உடல் சூட்டை தவிர்த்து பசியையும் தூண்டுகிறது.மேலும் பல ஆரோக்கிய நன்மை தரும் இந்த தண்ணீரை நாம் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்
3.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/4 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி அதில் பதிமுகம் பட்டை – 1/4 ஸ்பூன் சேர்த்து கொள்ள வேண்டும்.
4.இதோடு சிறிய துண்டு – சுக்கு, ஏலக்காய் – 1, வர மல்லி – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் நசுக்கி பொடி செய்து போட்டுக் கொள்ள வேண்டும்.
5.எல்லா பொருட்களும் தண்ணீரில் 5 லிருந்து 8 நிமிடம் நன்றாக கொதிக்கும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.
6.ஒரு மூடி போட்டு இந்த தண்ணீரை வெதுவெதுப்பாக ஆற வைக்க வேண்டும். -
அதன் பின்பு வடிகட்டி 1 டம்ளர் அளவு தண்ணீரை   காலையில் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
7.இது உடம்பில் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள, சிறுநீரக பிரச்சனையை சரிசெய்ய, மூல நோய் வராமல் தடுக்க, மூட்டு வலி சரியாக, அல்சரை குணப்படுத்த, சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்
 

.