இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் இந்த நீர்
பொதுவாக மாரடைப்புக்கு காரணம் கொலஸ்ட்ரால் அளவு அவரின் உடலில் அதிகம் சேர்வதுதான் ,அவர் எந்த டெஸ்டும் செய்யாமல் இருந்திருப்பார் .இந்த கொலஸ்ட்ரால் பற்றியும் அதற்கான நிவாரணம் பற்றியும் இந்த பதிவில் பாக்கலாம்
1.சிலரின் உடலில் எந்த அறிகுறியும் இல்லாமல் கொலஸ்ட்ரால் அதிக அளவு இருக்கும் . இப்படி கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக காணப்பட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
2.அதற்கு இஞ்சி தண்ணீர் உதவும் . இது நம் உடலில் உள்ள மொத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.
3.இந்த இஞ்சி தண்ணீர் பின்வருமாறு செய்வதன் மூலம், இதய நோய் மற்றும் கொலஸ்ட்ரால் தொடர்பான பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
4.முதலில் 1-2 லிட்டர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைத்து கொள்ளவும்
5.பின்னர் அந்த கொதிக்கும் நீரில் , பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து கொதிக்க விடவும் .
6.அந்த கலவையை 20 நிமிடங்களாவது கொதிக்க விட நம் ஆரோக்கியத்துக்கு நல்லது சேர்க்கும் ,
7.இப்படி இந்த கலவை கொதிக்கும்போது இஞ்சியின் மருத்துவ சக்தி தண்ணீருக்குள் இறங்கும்.
8. பின்னர் இந்தஇஞ்சி நீரை வடிகட்டி தினம் தோறும் காலையில் குடிக்கவும்.