×

முட்டையை 'ஆஃ ப் பாயில்' போட்டு சாப்பிட்டா கிடைக்கும் ஆரோக்கியம் பத்தி தெரிஞ்சிக்கோங்க

 

பொதுவாக ஆப் பாயில் முட்டை பலவிதமான நன்மைகளை கொண்டது அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.முட்டையை அரை வேக்காட்டில் உண்பது சிறந்த வழியாகும். முட்டையின் மஞ்சள் கருவை அப்படியே பச்சையாக உட்கொண்டால் அதிக பயனை அளிப்பதால் சிலர் அதை விரும்புவார்கள்.
2.ஆனாலும் கூட உணவு நச்சு அல்லது சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவால் உடல் நலம் பாதிப்படையாமல் இருக்க முட்டையை அரை வேக்காட்டுடன் சமைத்துக் கொள்வது நல்லது.


3.மேலும் அதனை போதுமான அளவில் சமைத்து உட்கொண்டால், அவை போதிய ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கிவிடும்.
4.அதற்கு அதனை சிறிது நேரத்திற்கு வேக வைத்தாலே போதும், நச்சு பாக்டீரியாக்கள் அழிந்து விடும்
5.அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடும் பொழுது அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே
6.வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும்.
7.பொரித்த முட்டையுடன் ஒப்பிடுகையில் கண்டிப்பாக அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதே என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவதால் அதை சாப்பிடுவது நல்லதே .