இதயம் மற்றும் தொண்டையில் தோன்றும் நோய்களை குணமாக்கும் இந்த இலை
பொதுவாக கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் செரிமான கோளாறு ,மூச்சு குழாய் அலர்ஜி ,வயிறு உப்பிசம் போன்றவை குணமாகும் ,மேலும் இதன் நன்மைகளை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்
1. கொய்யா இலையைக் கொண்டு சர்க்கரையை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
2.இந்த கொய்யா இலை சாறு இரத்தத்தில் இருக்கும் க்ளுகோஸ் அளவை குறைத்து ,சர்க்கரை அளவை தடுக்கும் தன்மை கொண்டது.
3.இந்த கொய்யா இலையில் உள்ள பீனாலிக் உடலில் உற்பத்தியாகும் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது
4.மேலும் இந்த கொய்யா இலைகள் இதயம் ,தொண்டை போன்றவற்றில் தோன்றும் நோய்களை குணமாக்க பயன்படுத்தப்படுகின்றன.
5..அதுமட்டுமல்லாமல் இந்த கொய்யா இலையில் வெல்லம் சேர்த்து டீ குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நீங்கி ,உடல் ஆரோக்கியம் மேம்படும் .
6.மேலும் இந்த கொய்யா இலைகள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது