×

பாலுடன் சோம்பு சேர்த்து சாப்பிடுவது எந்த உறுப்பை காக்கும் தெரியுமா ?

 

பொதுவாக பார்த்தால் சோம்பு நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.நம்மில் பலருக்கு வயிறு முட்ட சாப்பிடும் பழக்கம் உள்ளது .அப்படி பட்டவர்கள் சாப்பிட்டு முடித்ததும் கொஞ்சமா சோம்பு எடுத்து வாயில் மென்று வந்தால் போதும் சாப்பிட்ட உணவு நன்றாக சீரணம் ஆகும் 2.அதனால்தான் பல ஹோட்டல்களில் சோம்புவை ஒரு கிண்ணத்தில் வைத்து கொடுக்கின்றனர் .
3.சோம்பு கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா வறட்டு இருமல், வயிற்று புண் ,மாதவிடாய் கோளாறு ,மூக்குல நீர் வடியுறதெல்லாம் சரியாகும்.
4.மேலும் கல்லீரல் பலப்பட்டு பெண்களின் கருப்பையும் பலப்படும் ஆற்றல் கொண்டது சோம்பு ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

5.சிலருக்கு செரிமான கோலாறு இருக்கும் ,அதனால் பாலில் சோம்பு கலந்து குடித்து வந்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அகலும்.


6.மாதவிடாய் ,ஞாபக சக்தி மற்றும் வாய் துர்நாற்றத்தைப் போக்க வேண்டுமானால், சோம்பை பாலுடன் கலந்து குடிப்பது மிகவும் நன்மை தரும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது .
7.சோம்பை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது கண்களுக்கு நன்மை பயக்கும். சோம்பை சர்க்கரை மிட்டாய் சேர்த்து சாப்பிடுவது கண் ஆரோக்கியம் மேம்பட்டு நம் ஆரோக்கியம் சிறக்கும்