×

 மொச்சை பயறுக்குள் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

 

பொதுவாக நம் உடலுக்கு வயது கூட  குறையும் ஆற்றலை அதிகரிக்க நமக்கு கடலை வகைகள் ,பருப்பு வகைகள் ,பயறு வகைகள் உதவுகின்றன ,அந்த வகையில் இந்த பதிவில் மொச்சை பயறு மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய குணம் பற்றி பார்க்கலாம்  

1.மொச்சை பயிறு நம் உடலில் உண்டாகும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; இதன் மூலம் சுகர்பேஷண்டுகள் பயன் பெறுவர்
2.மொச்சை பயிறு நம் உடலில் உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் ஆற்றல் கொண்டது


3. மொச்சை பயிரில் , புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருப்பதால் நமக்கு நன்மை செய்யும்
4.மொச்சை பயிறில் இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் – பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை உள்ளதால் நமக்கு நன்மை செய்யும் .
5.சிலருக்கு மொச்சை சாப்பிட்டால், வாயுப் பிரச்னை ஏற்பட்டு உடலில் பல இடங்களில் பிடித்து கொள்ளும் . அவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
6.இவ்ளோ பவர் வாய்ந்த மொச்சை பயிறை சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
7.மேலும் கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், ஆகியோருக்கு இது நண்மை செய்யும்
8.மேலும் மொச்சை பயிறை சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிட ஆரோக்கியம் பிறக்கும்