×

ஓட்ஸில்  தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

 

பொதுவாக ஓட்ஸ் உணவு நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் .அந்த ஓட்ஸ் மூலம் ஒரு தண்ணீர் தயாரித்து குடித்தால் பல ஆரோக்கிய பலன்கள் நமக்கு உண்டு .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.ஓட்ஸ் தண்ணீர் தயாரிக்க, அரை கப் ஓட்ஸை எடுத்து கொள்ளவும் .பின்னர் அதனுடன் இரண்டு கிளாஸ் தண்ணீரில்  இரவில் ஊற வைக்கவும்.
2.பிறகு காலையில் அந்த ஊறிய ஓட்ஸில் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாகக் கலக்கவும். அதன் பிறகு, அதை ஒரு கிளாஸில் எடுத்து கொள்ளவும்.
3.பின்னர் அந்த ஊறிய ஓட்ஸில்  தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும்.


4.பின்னர் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஓட்ஸ் தண்ணீரை அருந்தினால், அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நம் ஆரோக்கியத்துக்கு வழி செய்கிறது
5.காலையில் வெறும் வயிற்றில் ஓட்ஸ் தண்ணீரை உட்கொள்வது பசியைக் கட்டுப்படுத்தி ,நம் உடல் எடையை  குறைக்க உதவுகிறது.
6.ஓட்ஸ் தண்ணீரை தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
7.ஓட்ஸ் தண்ணீரை தொடர்ந்து உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. மேலும் , செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவும்.