×

சர்க்கரை நோயாளிகளுக்கு சுகர் அளவை குறைக்க உதவும் இந்த பயிர்

 

பொதுவாக பாசிப்பயறில்   பொட்டாசியம் இருப்பதால் நம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் .மேலும் இந்த பயிரின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இது சர்க்கரை நோயாளிகளுக்கு சுகர் அளவை குறைக்க உதவும் .
2.இதில் உள்ள நார் சத்து மூலம் நமக்கு டைப் 2 சர்க்கரை நோய் வராது .


3.மேலும் இதில் கொழுப்பை கரைக்கும் தன்மை அடங்கியுயள்ளதால் ,நமக்கு இதய நோய்கள் வராமல் பாதுக்காக்கும் ,
4.மேலும் ரத்த சோகை நோய் வராமலும் இது பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது ,
5.மலிவான விலையில் கிடைக்கும் பாசிப்பயிற்றில் அதிகமாக நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றன.
6.பொதுவாக 100 கிராம் பாசிப்பயறில் 16 கிராம் நார்ச்சத்து உள்ளது.
7. நம் உடலுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து கொஞ்சம் பாசிப்பயிற்றிலேயே அடங்கியுள்ளது.
8.சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஊட்ட சத்து குறைபாடு இருக்கும் ,அந்த கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.