×

மிளகுடன் தேன் கலந்து  சாப்பிட்டு வந்தால்  எந்த நோயை அடித்து நொறுக்கலாம்  தெரியுமா ?

 

பொதுவாக நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியில் பல நோய்களுக்கு மருந்து இருக்கிறது .அந்த வகையில் மிளகு மூலம் எப்படி நோய்களை குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்

1.சித்த ,ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மிளகுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது .
2.மிளகு நம் உடலில் உண்டாகும்  சளி, இருமலை குணமாக்கவும் , நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது.
3.மேலும் மருத்துவ குணமுள்ள மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி, நம் உடலுக்கு வெப்பத்தைத் கொடுக்கிறது


4.மேலும் மிளகு வீக்கத்தைக் கரைக்கும். மேலும், உணவைச் செரிக்க வைத்து நமக்கு பசியை உண்டாக்கும் .
5.அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து வைத்து கொள்ளவும்
6. பின்னர் அந்த மிளகு பொடியை , தினமும் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வந்தால் சளி மாயமாய் மறைந்து போகும்
7.சிலருக்கு சளியும் காய்ச்சலும் இருக்கும் ,அவர்கள் மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகியவற்றை சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
8.பின்னர் இவற்றை கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வந்தால் ஜலதோஷத்தோடு உள்ள காய்ச்சலும் ஓடியே போய் விடும்
9.சிலருக்கு அடுக்குத் தும்மல் பாடாய் படுத்தும் .இந்த பிரச்சனை உள்ளவர்கள், மிளகை தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் அடுக்குத் தும்மல் வெடுக்கென்று காணாமல் போகும்
10.இவ்ளோ பவருள்ள மிளகுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். சளித் தொல்லையும் கிட்ட நெருங்காது