×

இதயம் பலம்பெற உதவும் இந்த காயின் ஆரோக்கியம் பற்றி தெரியுமா ?

 

பொதுவாக  புடலங்  காய்க்குள் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.குறிப்பாக இது உடல் உஷ்ணத்தை குறைத்து விடும் .அது மட்டுமல்லாமல் நமக்கு நல்ல பசியை உண்டு செய்யும் ஆற்றல் கொண்டது .
2.மேலும் இதன் காய், வேர், இலை மருத்துவ குணமுடையவை என்றாலும், நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான்.இதன் இலை நம் இதய நோய்க்கு நல்ல மருந்தாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிட பட்டுள்ளது .


3.காலையில் புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து, சாறாக பிழிந்து, வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டால் இதயம் சமநிலை பெறும்; இதயமும் பலம் பெறும்..
4.அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தல் அவசியம்.
5.இந்த புடலங்காயில் புரோட்டின் 0.5 கிராம், கொழுப்புச்சத்து 0.3 கிராம் மற்றும் ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன.
6.புடலங்காய் டைப் 2சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. மேலும் அதிகம் ஸ்வீட் சாப்பிடும் குழந்தைக்கு உண்டாகும் வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது.
7.விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது, புடலங்காயை வாங்கி கொட்டைகளை நீக்கி, கறியாக சமைத்து சாப்பிட்டால் போதும் காய்ச்சல் ஓடியே போய் விடும்