×

துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 

பொதுவாக  துத்தி இலையால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு .இந்த கீரையின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.மற்ற கீரைகளை போலவே துத்தி இலையையும் நாம் துவையல் மற்றும் கடைந்து சாப்பிடலாம் .
2.இதன் வேர் ,இலை மற்றும் பூ போன்றவை நமக்கு நன்மை கிட்டும் ,இந்த இலை மூலம் தீராத மலசிக்கல் குணமாகி விடும் ,
3.மேலும் பல்வேறு மூல நோய்கள் குணமாகி ஆரோக்கியம் சிறக்கும்.


4.மேலும் சில பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை படுதல் குணமாகி,உடல் வலியையும் குணமாக்கும் ஆற்றல் இந்த இலைக்கு உண்டு ,.  
5.துத்தியிலை கருப்பை சார்ந்த நோய்களுக்கு நல்ல தீர்வாகச் செயற்படும்.
6.துத்தி இலையை அதிகம் எடுத்து கொண்டால் சிறுநீர் பிரிய உதவும்.
7.உடல் சூட்டாலும், குறைவாக நீர் அருந்துவதாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது இதனைப் போக்க துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரிந்து கிட்னி பிரச்சினை வராமல் காக்கும்  
8.மேலும் துத்தி இலை நம் உடலில் சிறுநீரக நோய் வராமல் காக்கும்
9.மேலும் துத்தி இலை பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம் போன்ற நோய்களைக் குணமாக்கும்.
10.துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ,ஈறு பிரச்சினைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.