×

உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை  கரைய வைக்கும் பானம் தயாரிக்கும் முறை

 

பொதுவாக  நம் வீட்டுக்குளேயே இருக்கும் இரண்டு பொருட்களை கொண்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்று பார்க்கலாம்

1.சிலர் உடல் எடையை குறைக்க சிரமப்படுவர் .இதற்கு இஞ்சி மற்றும் கொத்தமல்லி கொண்டு தயாரிக்கப்படும் பானம்  பெரிதும் உதவி புரியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது .
2.மேலும் ஆரோக்கிய உணவுப் பழக்கம் வேண்டும் .அதனுடன்  உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டு வர வேண்டும் .
3.அந்த இஞ்சி ,கொத்த மல்லி பானத்தை தினமும் குடித்து வர வேண்டும்.இந்த பானம் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்


4.முதலில் 1/2 இன்ச் இஞ்சி மற்றும் 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஒரு டம்ளர் நீரில் போட வேண்டும்.
5.இந்த கலவையை இரவு முழுவதும் நீரில்  ஊற வைக்க வேண்டும்
6.மறுநாள் காலையில் அந்த கலவை உள்ள நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள் 7.பின்னர் , 5 நிமிடம் மிதமான தீயில் அந்த கலவையை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
8.பின் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.    
9.இந்த இஞ்சி-மல்லி நீர் கஷாயத்தை  காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
10.இப்படி வெறும் வயிற்றில் குடிக்கும் போது, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து விடும்  
11.இதன் மூலம் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.