மாதுளை தோல் பொடியை சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக எலுமிச்சை பழ தோல் முதல் வாழைப்பழ தோல் ,மாதுளை பழ தோல் வரை நமக்கு நன்மைகளை அள்ளி கொடுக்கும் .மாதுளை பழ தோல் நமக்கு கொடுக்கும் ஆரோக்கியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு அடிக்கடி சிறுநீர் போகும் .அதை கண்ட்ரோல் செய்ய முடியாமல் அவதி படுவர் .
2.அதனால் சிலர் தங்கள் உடைகளில் கூட போய் விடுவது உண்டு .இதற்கு இந்த மாதுளை தோல் சிகிச்சை நல்ல பலன் கொடுக்கும் .
3.முதலில் இந்த மாதுளை பழ தோலை வெய்யிலில் காய வைத்து விடுங்கள் .
4.பின்னர் இந்த தோலை பேஸ்ட் போல அரைத்து வெந்நீரில் சேர்த்து குடித்து வந்தால் இந்த பிரச்சினை குணமாகி விடும் .
5. தொண்டை வலியால் நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தால் மாதுளை தோல் பொடியை பயன்படுத்தும் பொழுது அது விரைவில் நல்ல பலனை கொடுக்கும்.
6.வெயிலில் நன்கு உலர்த்திய மாதுளை தோலை தண்ணீரில் கொதித்த பிறகு ,இந்தத் தண்ணீரைக் கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்து வரும்பொழுது விரைவில் தொண்டை வலி குறையும்.
7.மாதுளைத்தோலில் இதய நோய்களுக்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் நிரம்பி காணப்படுகிறது.
8.இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது.
.