இந்த பழ ஜூசை குடிப்போரை கண்டு பயந்து ஓடும் நோய்கள்
பொதுவாக பழங்கள் உடல் நலனுக்கு நல்லது .அதிலும் கொய்யா பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அற்புதமான நன்மைகளை கொடுக்கும் .இதை பழமாக சாப்பிடாமல் கொய்யா சாராகவும் குடிக்கலாம் .அதிலும் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .மேலும் கொய்யா சாறு மூலம் கிடைக்கும் மற்ற நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்
கண் பார்வை&சருமப் பாதுகாப்பு
வைட்டமின் ஏ குறைபாட்டால் , மாகுலர் சிதைவு, கண்புரை போன்ற கண் தொடர்பான நோய்கள் சிலருக்கு ஏற்படும் . கொய்யா சாற்றில் அந்த வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. இது கண் செல்களைப் பாதுகாக்கிறது மற்றும் கண்பார்வை பலவீனமடைவதைத் தடுத்து கண்களை பாதுகாக்கும் .
வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும் .இந்த கொய்யா சாற்றில் வைட்டமின் சி ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. கொய்யாவில் இருக்கும் சில வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எடையைக் குறைக்க&நோய் எதிர்ப்பு சக்தி
கொய்யா சாறு, அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து காரணமாக உடல் எடையை பராமரிக்கவும் குறைக்கவும் உதவுகிறது, ஏனெனில் இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும், எனவே அதிகப்படியான பசி உணர்வை தடுக்கிறது. இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன, இது காலையில் முதலில் சாப்பிடுவதற்கு சரியான பானமாக அமைகிறது.மேலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்த கொய்யா சாறு சிறந்த பலனை கொடுக்க வல்லது .