×

எடையைக் குறைக்க இந்த  விதைகளை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வாருங்கள்.

 

பொதுவாக  பூசணி விதைக்கு தனி சிறப்பு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது .அந்த பூசணி விதைகள் மாரடைப்பு வராமல் இதய நோயாளிகளை பாதுகாக்கும் தன்மை உள்ளது .மேலும் இதன் மற்ற நன்மைகளை பார்க்கலாம்

 1. சர்க்கரை நோயை கட்டுபடுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் .


2.தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டால் போதும் உடலில் சுகர் லெவல் அதிகமாகாமல் நம் உடலை காக்கலாம்
3.பூசணி  விதைகளில் உள்ள பாஸ்பரஸ், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும்.
4.எனவே எடையைக் குறைக்க பூசணி விதைகளை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வாருங்கள்.
5.ஏனெனில் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை உள்ளன . 6.பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.
7.இது எலும்புகளின் வலிமையை அதிகரித்து முதுமை காலத்தில் எலும்பு .தேய்மானத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.