ஓவரா கூல் ட்ரிங்க்ஸ் குடிப்போருக்கு எதிர்காலத்தில் என்ன பிரச்சினை வரும் தெரியுமா ?
பொதுவாக நாம் வயது ஆக ஆக நம் எலும்புகள் பலவீனமடைய தொடங்குகின்றன அதனால் மூட்டு வலி ,இடுப்பு வலி ,கை கால் வலி போன்ற வலிகள் தோன்றும் .இந்த எலும்புகள் பலவீனமடையாமல் இருக்க நாம் எந்த உணவுகளை உண்ண வேண்டும் ,எதை தவிர்க்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.உப்பு அதிகமாக உண்டால் எலும்புகள் பலவீனமடையும்.
2.மேலும், உப்பு உங்கள் உடம்பில் உள்ள எலும்பில் கால்சியத்தை உறிஞ்சி பலவீனப்படுத்தி ஆரோக்கியத்தை பாதிக்கும் .
3.எலும்பை பாதுகாக்க அதிகம் காபி குடிப்பவராக இருந்தாலும் அதனையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
4.ஏனெனில் காபியில் உள்ள காஃபின் எலும்பில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி பலவீனப்படுத்தும் ஆற்றல் கொண்டது
5.சிலர் எதற்கெடுத்தாலும் குளிர்பானங்களை குடிப்பார்கள். இந்த கூல் ட்ரிங்க்ஸ் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
6.சிலர் சோடா குடிப்பார்கள் .இந்த சோடா மற்றும் குளிர் பானங்களில் அதிகளவில் காஃபின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.
7.இந்த சோடாவின் காஃபின் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக எடுத்துக் கொள்வது எலும்புகளுக்கு ஆபத்தானது.
8.தற்போதைய காலத்தில் வீட்டை விட வெளியில் சாப்பிடும் பழக்கம் அதிகளவில் வந்துள்ளது.
9.மேலும், வெளியில் சாப்பிடும் துரித உணவுகள் உங்களது எலும்பை வலுவிழக்க செய்து பாதிப்பை ஏற்படுத்தும்.
10.சிலர் இனிப்பு உணவுகள் அதிகம் உண்பதுண்டு .இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் அதில் உள்ள சோடியம் எலும்பு பாதிப்பை விளைவிக்கும்.
11.அந்த வகையான உணவில் உள்ள சோடியம், கால்சியத்தை உறிஞ்சி எலும்பை பலவீனப்படுத்தும் ஆற்றல் கொண்டது