பூண்டின் அதிகப்படியான பயன்பாடு என்ன தொல்லையை தரும் தெரியுமா ?
பொதுவாக பூண்டு கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது ,இவ்வளவு நன்மைகள் கொண்ட பூண்டை அதிகம் எடுத்து கொள்வதும் நமக்கு கெடுதல் விளைவிக்கும் .இந்த பதிவில் பூண்டு ஓவரா உண்பதால் உண்டாகும் கேடுகள் பற்றி பார்க்கலாம்
1.சிலர் பூண்டை சட்னி ,துவையல் ,ஊறுகாய் ,குழம்பு என்று பல வகைகளில் தினம் சேர்த்து கொள்வர் .
2.இப்படி அதை அதிகமாக உட்கொள்வோருக்கு இரத்தப் போக்கு பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது .
3.நாம் நமது கல்லீரலை காக்க வேண்டும் .பூண்டில் அல்லிசின் என்ற கெமிக்கல் அதிகம் இருக்கிறது .
4.அதனால் இதை அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரித்து , கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
5.சிலருக்கு திடீரென்று சருமத்தில் அரிப்பு உண்டாகும் .இதற்கு அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் உண்டான விளைவாக கூட இருக்கலாம்
6.சிலர் வீட்டு வைத்தியம் செய்கிறேன் என்று பச்சையாக பூண்டை சாப்பிடுவது உண்டு .இப்படி எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் .
7.சிலர் வாயு தொல்லையை விரட்டும் என்று பூண்டை அதிகம் சாப்பிடுவர் .
8.ஆனால் பூண்டின் அதிகப்படியான பயன்பாடு வாய்வு தொல்லை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கி நம்மை நிம்மதியிழக்க செய்யும்
9.சிலர் பூண்டு அதிகமாக சாப்பிடுவது குமட்டல், நெஞ்செரிச்சல், வாந்தி போன்றவற்றை உண்டாக்கும் .
10. பூண்டில் , அதிக சல்பர் இருப்பதால், அதனை அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்கி அடுத்தவர் அருகில் வரவே யோசிப்பர்