×

ஒரு வாரம் வெள்ளை சர்க்கரையை ஒதுக்கினால் எவ்ளோ நன்மை  தெரியுமா ?

 

பொதுவாக நம் முன்னோர்கள்    சமைத்த அனைத்து இனிப்பு வகைகளிலும் வெள்ளை சர்க்கரை என்று ஒன்று கிடையவே கிடையாது .அதனால் அவ்ர்கள் பல நோய்கள் வராமல் ஆரோக்கியமாய் வாழ்ந்து வந்தனர் .ஆனால் இன்றைய சமூகத்தில் கரு நாகம்போல் நுழைந்து நம்மையும் நம் நாக்கையும் அடிமையாக்கிய வெள்ளை சர்க்கரையால் நாம் புது புது நோய்களுக்கு ஆளாகிறோம் .இந்த சர்க்கரையால் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் காணலாம்
1.இதனால் ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரித்தல் ,கெட்ட கொழுப்பு உருவாக்கல் ,கல்லீரல் மற்றும் கணைய பாதிப்பு ,எலும்பு தேய்மானம் ,சிறுநீரக பாதிப்பு ,சர்க்கரை நோய் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.


2.உங்கள் உணவில் இருந்து ஒரு வாரம் முழுவதும் வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக நீக்கினால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.
3.ஒரு வாரம் முழுவதும் வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக நீக்கினால்  இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்  
4.ஒரு வாரம் முழுவதும் வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக நீக்கினால் உணவு செரிமானம்  எளிதாகவும் வேகமாகவும் நடைபெறும்  
5.உள்ளுறுப்புகளின்  உள் வீக்கத்தைக் குறைய  தொடங்கும்.
6.இரவில் வெள்ளை  சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்த்தல் நிம்மதியான தூக்கத்திற்கு வழி செய்யும்