×

மூல நோயை குணப்படுத்தும் மூன்று உணவு வகைகள்

 

பொதுவாக மூல நோய் இன்று பலரை பாடாய் படுத்தி எடுக்கிறது இந்த நோய்க்கு புட்டு, இடியப்பம், இட்லி போன்றவற்றை   உணவுகளாக எடுத்துக் கொள்வது நல்லது. இவை எளிதில் ஜீரணம் அடையக் கூடியவை என்பதனால் மலம் கழிப்பதிலும் சிரமம் இருக்காது. மூல நோயும் குணமடையும்

வெந்தயத்தை  இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த நீரை பருகி வந்தால் மூலநோய் குணமடையும். .மேலும் மூல நோய்க்கு எந்த உணவுகளை சேர்க்கலாம் எதை தவிர்க்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம்

1.பொதுவாக குளிர்ச்சி தன்மை கொண்ட உணவுகளை உடலில் சேர்க்கும் போது மூலநோய் குணமடையும்.

2.பழங்களை உணவில் சேர்ப்பதன் மூலம் மூல நோயை குறைக்கலாம்.

3.மூல நோய் குணமாக ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாசி பழம், பேரிக்காய், மாதுளை போன்றவற்றை உண்ணலாம் 

4. பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி சப்போட்டா, திராட்சை முதலான பழங்களையும் உணவில் சேர்ப்பதன் மூலமாக மூலநோய் குறையும்

5.மூல நோய் குணமாக தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, ப்ரக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட், வெண்டிக்காய், புடலங்காய் கொத்தமல்லி போன்ற காய்கறிகளை உணவில் சேர்க்கலாம்.

6.இந்த உணவுகளின் மூலம் உடற் சூடு குறைந்து ஜீரணம் எளிதாகும்.

7.மூல நோய் குணமாக  500g காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

8.மூல நோய் குணமாக  இதில் 50% பச்சையாகவும், 50% காலை உணவு மற்றும், மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

9.மூல நோய் குணமாக  வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் குறிப்பாக உடலுக்கு சூட்டை ஏற்படுத்தக் கூடிய கீரை வகைகளை தவிர்க்க வேண்டும்.

10.மூல நோய் குணமாக  அனைத்து வகையான பருப்பு வகைகளும் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளலாம். .

11.மூல நோய் குணமாக மோரை உணவில் சேர்ப்பதன் மூலம் வயிறு குளிர்மையாகும். மேலும் ரத்தப்போக்கும் படிப்படியாக குறையும்.

12.மூல நோய் குணமாக உணவில் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலம் இலகுவாக கழிக்க முடியும்.