×

உடலில் இயற்கை முறையில் கால்சியம் கிடைக்கும் வழிகள்

 

பொதுவாக கால்சியம் சத்துக்கள் குறைந்தால் நம் உடலில் பல பிரச்சினை உண்டாகும் அதை எப்படி சரி செய்யலாம் என்று இப்பதிவில் பாக்கலாம்
 1.கால்சியம் குறைந்தால் குழப்பம் மற்றும் ஞாபகமறதி, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை, மன அழுத்தம், பலவீனமான நகங்கள், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் தேய்மானம் ஆகிய பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் எதிர்கொள்வார்கள்
2.இந்த கால்சியத்தை மாத்திரையின்றி இயற்கை உணவு மூலம் கிடைக்க அதை தயாரிக்கும் முறையை கூறுகிறோம்

 
3.முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் சூடேறியதும் ஒரு கப் கேழ்வரகு மாவை சேர்த்து வறுக்க வேண்டும்.
4.பின்னர் இதனை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கடாயில் கருப்பு எள்ளை சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
5.பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் 15 பாதாம் பருப்புகளை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
6.பின்னர் இந்த பொடியை கேழ்வரகு மாவுடன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதனை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி போட்டு வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
7.ஒரு டம்ளர் பாலுடன் 2 ஸ்பூன் கேழ்வரகு பவுடரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்தால் போதும். இதனைத் தொடர்ந்து எடுத்து வர உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க ஆரம்பிக்கும்.