×

பூரான் கடிக்கு பூரண சிகிச்சை முறை

 

பொதுவாக பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப

தடிப்புகள் உண்டாக  செய்யும்.

பூரான் கடியால் உடலெங்கும் அதிக தடிப்பும், அரிப்பும்,

எரிச்சலும் காணப்பட்டு ,சொறிந்து புண்

ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

இந்த விஷத்தன்மையுள்ள பூரான் கடியை குணப்படுத்தும் மருந்து எப்படி வீட்லேயே செய்யலாம் என்று பார்க்கலாம்

1. பூரான் கடியை குணமாக்க குப்பைமேனி இலையும், உப்பும் சேர்த்து

150 கிராம் வீதம் எடுத்து அரைக்க வேண்டும.

2.இந்த அரைத்த குப்பை மேனி விழுதுடன் 30 கிராம் மஞ்சள்

சேர்த்து உடல் முழுவதும் நன்றாகப் பூசி கொள்ளவும் ,

3.இந்த மூலிகை கலவை உடலில் ஊறிய ஒருமணி நேரம் கழிந்து சுத்தமான நீரில்

குளிக்கவேண்டும்.

4.இப்படி இந்த சிகிச்சையை மூன்று நாட்கள் காலையில்

இவ்வாறு செய்து வர தடிப்பும், அரிப்பும் மறையும்.

5.சிலர் பூரான் கடித்து பல நாட்கள் ஆகியும் மருந்து

போடாமல் இருப்பர் .இதற்கு  ஊமத்தை தைலம் தயாரித்து

உடலில் தடவி குளிக்க இந்த விஷத்தன்மை இறங்கி விடும்

6.அடுத்து பூரான் கடி விஷம் குறைய நல்லெண்ணெய் -1/4 லிட்டர், ஊமத்தம் செடியின்

வேர் – 100கி எடுத்து கொள்ள வேண்டும்.

7.இந்த ஊமத்தம் வேரை நன்றாக இடித்து நல்லண்ணெயில்

ஊற போடவும்.

8.சூரிய வெயிலில் வைத்து

தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்க

வேண்டும்.

9.இப்படி செய்ய பூரான் கடியால் வந்த உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற

தொந்தரவும் நீங்கும்.

10.இந்த மூலிகை தைலத்தைத் தினந்தோறும்

சூரிய வெயிலில் வைத்து பயன்படுத்த வேண்டும்