இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறவங்களுக்கு இதய நோய் வரவே வராது
இதய ஆரோக்கியத்திற்கு 5 எளிய வழிமுறைகளை நாம் கடைபிடிக்கலாம்.
1.வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அது கல்லீரலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கச் செய்யும். அப்படி செய்தால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
2.இரண்டாவதாக மிக முக்கியமான ஒன்று பல் துலக்குவது. நாம் சரியான நேரத்தில் பல் துலக்காவிட்டால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடும்.
3.மூன்றாவதாக தூக்கமின்மை. நாம் சரியான நேரத்தில் தூங்கி எழும்பொழுது எந்த பிரச்சனையும் சந்திக்க தேவை இல்லை ஆனால் சிலர் ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக மட்டுமே தூங்குகின்றன. அப்படி தூங்கும்போது மாரடைப்பு மற்றும் இதயத்தில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.
4.மேலும் அலுவலகப் பணியில் வேலை செய்பவர்கள் தினமும் 30 நிமிடம் ஆவது உடற்பயிற்சி செய்வது சிறந்தது.
5.குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு அதிகமாக இதய நோய் பாதிப்பு வருவதாக தெரிவிக்கின்றனர் எனவே புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்ப்பது இதயத்திற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.